பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் - வைத்தியர் கைது

#SriLanka #Arrest #Police #Women #Hospital #doctor #Sexual Abuse
Prasu
1 year ago
பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் - வைத்தியர் கைது

மாவனல்லை அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவரே சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வைத்தியரின் தந்தை கேகாலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாகக் கூறப்படும் வைத்தியரிடமும், சம்பவம் இடம்பெற்றபோது கடமையிலிருந்த ஐவரிடமும் வாக்குமூலங்களைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!