ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய சுற்றாடல் அமைச்சர் பதவி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Gazette
#environment
Mayoorikka
1 year ago

சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது.



