ரணில் பக்கம் சாயும் சி.வி விக்னேஸ்வரன்! நாடாளுமன்றத்தில் இரகசியம் பேசியது என்ன?

#SriLanka #Sri Lanka President #Parliament #Ranil wickremesinghe #C V Vigneswaran
Mayoorikka
1 year ago
ரணில் பக்கம் சாயும்  சி.வி விக்னேஸ்வரன்! நாடாளுமன்றத்தில் இரகசியம் பேசியது என்ன?

தமிழர்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதி ரணிலுக்கு, விக்னேஸ்வரன் ஆதரவளிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 நேற்றைய தினம் ஜனாதிபதி ரணிலை நாடாளுமன்றில் சந்தித்து கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டன என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.

 ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் உரையற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை ஏற்புடையதல்ல எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போராட்டங்களின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!