முதுமையை தடுக்கும் மருந்தை அறிமுகம் செய்யவுள்ள கொழும்பு பல்கலைக்கழகம்!
#SriLanka
#Colombo
#Lanka4
#University
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

முதுமையைத் தடுக்கும் இயற்கை மருந்தின் உற்பத்தி இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மருந்து இயற்கை மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படுவதாகவும், முதுமையைத் தடுப்பது அல்லது எண்ணிலடங்கா வயதைக் காட்டிலும் இளமையாக தோற்றமளிப்பதே இந்த மருந்தின் செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த மருந்தின் உற்பத்தி மற்றும் சோதனைக்கு 04 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த மருந்து உற்பத்தி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



