கொழும்பை முடக்க திட்டமா? சஜித் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடக்குமா?

#SriLanka #Colombo #Protest #Sajith Premadasa #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
கொழும்பை முடக்க திட்டமா? சஜித் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் நடக்குமா?

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்று கொழும்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட உள்ள இந்த போராட்டம், இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட பல பிரச்சினைகளை முன்னிறுத்தவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

images/content-image/1706597581.jpg

கொழும்பு ஹைட் பார்க் மைதானம் மற்றும் பஞ்சிகாவத்தையில் இன்று பிற்பகல் 1.30 க்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாட்டின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய இடையூறுகள் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!