ரணிலின் தீர்மானத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் - கண்ணீர் புகை நீர்த்தாரை பிரயோகம்!
#SriLanka
#Police
#Student
#Protest
#Lanka4
#University
#TearGas
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

களனி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தற்போது, அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் நேற்றிரவு பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய தொழிநுட்ப பீடம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்கு பொலிஸார் நேற்றிரவு நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியிருந்தனர்.
எவ்வாறாயினும் கலைந்து சென்ற மாணவர்கள் இன்று அதிகாலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



