விறுவிறுப்பாகும் தேர்தல் களம் - சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி?
#SriLanka
#Election
#Chandrika Kumaratunga
#Lanka4
#srilanka freedom party
#srilankan politics
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஸ்தாபிப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பதிலாக இந்தப் புதிய கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புதிய கூட்டணியின் சின்னமாக வெற்றிலைக்கு பதிலாக கதிரையை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



