மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!
#SriLanka
#Lanka4
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொட்டகலை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் விசேட புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படப்பிடிப்பிற்காக கொடுக்கப்பட்ட புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டது. சிறப்பு அனுமதியின் கீழ், படத்தின் படப்பிடிப்பிற்காக ஜனவரி 24 முதல் 29 வரை இந்த 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்களை ரயில்வே துறை வழங்கியுள்ளது.
சில பகுதிகளாக நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று கொழும்பு திரும்பும் போதே ரயில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



