யார் இந்த லால் தாஸ்?
#India
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Thamilini
1 year ago

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் - மசூதியின் மையக் குவிமாடத்தின் கீழ் அமைந்த சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி கோவிலுக்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முதல் தலைமை பூசாரிதான் இந்த லால் தாஸ்.
ராமர் கோயில் பூசாரியாக இருந்த போதும் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவது என்பது ஹிந்துகளின் ஓட்டுகளைப் பெறுவதற்காக மக்களிடையே மூடப்படும் சண்டை என்றார் அவர்.
அது மத உணர்வுகளைத் தூண்டக்கூடிய அப்பட்டமான அரசியலைத் தவிர வேறில்லை
என்று பகிரங்கமாக எதிர்த்தார் . 1993 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி,
நள்ளிரவில், அயோத்தியில் இருந்து -
20 கிமீ தொலைவில் ராணிபூர் சத்தர் கிராமத்தில் பிணமாகக் கிடந்தார் லால் தாஸ். அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டார்கள். கொலைக்குக் காரணம் நிலத்தகராறு என்று வழக்கு முடிக்கப்பட்டது.



