பாகிஸ்தான் நடிகையை திருமணம் முடித்த பிரபல வீரர்

#Actress #wedding #Pakistan #Cricket #Player #lanka4Media #lanka4.com
Prasu
2 months ago
பாகிஸ்தான் நடிகையை திருமணம் முடித்த பிரபல வீரர்

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010-ம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியருக்கு இஷான் என்ற மகன் உள்ளார். இதற்கிடையே, சோயிப் மாலிக்-சானியா மிர்சா ஜோடி முறைப்படி விவாகரத்து செய்துவிட்டனர்.

இந்நிலையில், சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார்.

 இதுதொடர்பான புகைப்படங்களை சோயிப் மாலிக் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.