நெல்லையில் பூக்களின் விலை வரலாறு கானாத அளவு உயர்வு மல்லிப்பூ கிலோ 6000 ரூ

#India #Flower #Lanka4
Lanka4
3 months ago
நெல்லையில் பூக்களின் விலை வரலாறு கானாத அளவு உயர்வு மல்லிப்பூ கிலோ 6000 ரூ

நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு வரலாறு காணாத வகையில் மல்லி பூவின் விலை ஒரு கிலோ 6000 ரூபாயாகவும் பிச்சுப் பூவின் விலை அதிகபட்சமாக ரூபாய் 2500 ஆகவும் உள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள் . 

 நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக விளை நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது இதே போல் நெல்லை மாவட்டத்தில் சுரண்டை பாவூர்சத்திரம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்களை அதிகமாக உற்பத்தி செய்வார்கள் இந்த ஆண்டு மழையினால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதால் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து தான் பூக்கள் இங்கு வரவழைக்கப்படுகிறது.

 இன்று மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ 6 ஆயிரம் ரூபாயாகவும் பிச்சுப் பூவின் விலை ஒரு கிலோ 2500 ரூபாய் ஆகும் கேந்தி பூவின் விலை ஆயிரம் ரூபாய் ஆகும் உள்ளது இதேபோல் கனாகம்பரம் , ரோஜா, முல்லை, பச்சைபூ உட்பட மற்ற பூக்களின் விலையும் அதிகமாக காணப்படுகிறது இதற்கு முக்கிய காரணமாக மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறந்ததாலும் நாளை தான் முதல் முகூர்த்த நாள் என்பதாலும் ஏராளமான பொதுமக்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு பூக்களை வாங்கி செல்கின்றனர் இதே போல் நாளைக்கும் நாளை மறுநாளும் பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறுவதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் தற்பொழுது இந்த விலை ஏற்றம் பொதுமக்களை மிகுந்த வேதனை அடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது