முயல் விடும் வினோத திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

#India #Tamil Nadu #Tamilnews #lanka4news
Lanka4
3 months ago
முயல் விடும் வினோத  திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அடுத்த புன்னை கிராமத்தில் உள்ள, ஓம்சக்தி கருமாரியம்மனுக்கு காணும் பொங்கலையொட்டி பாரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். காணும் பொங்கல் நாளான நேற்று பாரிவேட்டைத் திருவிழாவின் அங்கமான முயல்விடும் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் எம்.வி. தனபால் தலைமையில் விழாக் குழுவினர் முன்னிலை வகித்தனர். 

 புன்னை மந்தைவெளி மைதானத்தில், நடைபெற்ற விழாவில் அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் வந்த கருமாரி அம்மன் முன்பாக, முயலை வைத்து குழந்தைகளை ஆசிர்வதித்தனர். இதன் காரணமாக குழந்தைகளின் சுவாசப் பிரச்சினை கள் தீரும் என்பது இந்த திருவிழா வில் பங்கேற்கும் பக்தர்களின் நம்பிக்கை. அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் இருந்த வாகனத்தின் மீதேறி நின்ற விழாக் குழுவினர் முயலை குழந்தைகளின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தனர். 

 இதையொட்டி, இசைக்கலைஞர்கள் இசைக்க, நடைபெற்ற பாரிவேட்டை திருவிழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஊராட்சி செயலர் எம்.பி.வெங்கி டேசன், உள்ளிட்ட ஊராட்சி பிரமுகர்கள், பக்தர்கள் மற்றும் மருதாடு, அதியனூர், , அதியங்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்