சிம்ம ராசியினர் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது சிறந்தது - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #lanka4Media #lanka4.com
Prasu
2 months ago
சிம்ம ராசியினர் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது சிறந்தது - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். பரணி: வரவைவிட செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடுவீர்கள். கார்த்திகை 1: திட்டமிட்டு செலவுகள் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: செயல்களில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். ரோகிணி: எதிர்பாராத வரவுகளை இன்று அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். நண்பர்கள் துணையுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி ஆதாய நிலையைக் காண்பீர்கள். நிதிநிலை உயரும். திருவாதிரை: பழைய கடன்கள் வசூலாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் மதி நுட்பத்தால் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். பணியில் கூடுதல் கவனம் தேவை. 

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும். வியாபாரத்தில் ஆதாயம் காண்பீர்கள். பூசம்: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உடல்நிலையில் கவனம் அவசியம். ஆயில்யம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். பூரம்: தேவையற்ற நெருக்கடிகள் தோன்றும் என்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். உத்திரம் 1: நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் இன்று சில தடைகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நண்பர்களால் நன்மைகள் அதிகரிக்கும். அஸ்தம்: தேவையற்ற குழப்பங்கள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. சித்திரை 1,2: வாழ்க்கைத்துணையின் வழிகாட்டுதலுடன் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். 

துலாம்

சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: எதிரிகளின் தொல்லை விலகும். எதிர்பாராத வேலைகள் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த பிரச்னை தீரும். சிலர் வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: முயற்சிகள் வெற்றியாகும். யோசிக்காமல் செய்த செயல்களிலும் லாபம் அதிகரிக்கும். அனுஷம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். கேட்டை: திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். இடத்தை விற்பதில் இருந்த தடைகள் விலகும். 

தனுசு

மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சொத்து விவகாரத்தில் உங்களின் முயற்சி வெற்றியாகும். பூராடம்: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இயந்திரப் பணியில் கூடுதல் கவனம் தேவை. உத்திராடம் 1: உங்கள் செயல்கள் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர்கள். செல்வாக்கு உயரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனத்துடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு எதிர்மறையான பலன் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. அவிட்டம் 1,2: உங்கள் எண்ணத்தை வேறு வகையில் சிதற விட வேண்டாம். எதிர்பார்த்த வருமானம் வரும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நிறைவேறாமல் இருந்த செயல் இன்று நிறைவேறும். குறுக்கு வழியில் மனம் செல்லும். சதயம்: மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: ஜென்ம சனியும் அஷ்டம கேதுவும் நெருக்கடிகளை அதிகரிப்பார்கள். செயலில் நிதானம் அவசியம். 

மீனம்

பூரட்டாதி 4: மனக்குழப்பம் தீரும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உத்திரட்டாதி: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் தனித்தன்மை இன்று வெளிப்படும். ரேவதி: குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் சங்கடம் தோன்றும்.