அறிமுகமானது முதல் நீண்டதூர ஆளில்ல விமானம்!

#India #Lanka4 #Navy #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
3 months ago
அறிமுகமானது முதல் நீண்டதூர ஆளில்ல விமானம்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Drishti 10 ‘Dtarliner’ ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விமானம் அனைத்து வானிலை நிலைகளையும் தாங்கி 36 மணி நேரம் காற்றில் சுற்றித் திரிந்து உரிய தகவல்களைப் பெறும் திறன் கொண்டதோடு 450 கிலோ எடையை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இது அதானி குழுமத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் அதன் முதல் டேக்-ஆஃப் விழா ஹைதராபாத்தில் உள்ள அதானி விண்வெளி பூங்காவில் நடைபெற்றது.

images/content-image/1704955613.jpg

த்ரிஷ்டி 10 விமானம் இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் என்றும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த விமானம் தங்களது கடற்படை செயல்பாடுகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள உதவும் என்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அட்மிரல் ஆர்.ஹரி குமார் குறிப்பிட்டுள்ளார்.

அதானி குழுமத்தின் ஒரு அங்கமான அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ், இந்தியாவில் சிறிய ஆயுதங்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், ரேடார்கள், பாதுகாப்பு மின்னணு அமைப்புகளுடன் கூடிய விமானங்கள், மேம்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.