எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி

#Twitter #technology #Social Media #Tamilnews #money #X
Prasu
2 years ago
எக்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய வசதி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதை 'எக்ஸ்' என்று பெயர் மாற்றினார்.

எக்ஸ் தளத்தில் இதுபோன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் எலான் மஸ்க்.

இந்நிலையில், எலான் மஸ்க், "எக்ஸ் செயலியில் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:- எக்ஸ் செயலி மூலம் பிறருக்கு பண பரிமாற்றம் செய்யும் உரிமம் பெற அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

 இறுதி ஒப்புதல் வந்த பிறகு அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் எக்ஸ் செயலி மூலம் பண பரிமாற்றம் செய்ய முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!