இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வெள்ள அனர்த்தம் தொடர்பாக மதுரை எம்பி
#India
#Minister
#Lanka4
#Flood
#வெள்ளம்
#லங்கா4
#Finance
#இந்தியா
Mugunthan Mugunthan
1 year ago
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களை சந்தித்து தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து பேட்டியளித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார்.
அதில் அவர், ‘‘நிவாரணத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டியது தானே என்கிறார் நிர்மலா சீதாராமன். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலேயே கூட்டி வந்திருக்க வேண்டியது தானே… ஏன் நடக்கவிட்டு கூட்டி வந்தீங்க என்று நாங்கள் கேட்க மாட்டோம்.

பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி… உபதேசம் அல்ல…’’ என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.