உலகளாவிய ரீதியில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

#Corona Virus #world_news
PriyaRam
4 months ago
உலகளாவிய ரீதியில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா - உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகளாவிய ரீதியில் கடந்த நான்கு வாரங்களில் புதிய கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 850,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1703328991.jpg

அத்துடன், உலகளாவிய ரீதியில் கடந்த 28 நாட்களில் 3,000க்கும் மேற்பட்ட புதிய கொவிட் -19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.