சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வை அறிவித்த தென்ஆப்பிரிக்க வீரர்

#International #Test #Cricket #sports #Player #SouthAfrica #retirement
Prasu
4 months ago
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வை அறிவித்த தென்ஆப்பிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டீன் எல்கர் 2012-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். 

இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.

36 வயதான டீன் எல்கர் வருகிற 26-ந் தேதி முதல் ஜனவரி 7-ந் தேதி வரை சொந்த மண்ணில் நடைபெறும் 2 ஆட்டங்கள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது குறித்து டீன் எல்கர் கூறுகையில், 'கிரிக்கெட் ஆடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச்சிறந்ததாகும். சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் ஆடியதை கவுரவமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். 

இது நம்பமுடியாத ஒரு அருமையான பயணமாகும். எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுபோல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு கடைசி போட்டியாகும். 

ஏனெனில் இந்த அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானமான கேப்டவுனில் எனது முதல் ரன்னை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் ஆடுகிறேன்' என்றார்.