மாத்தறை சிறைச்சாலையில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் : கைதி ஒருவர் பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
காய்ச்சல் காரணமாக மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த கைதி நேற்று (22.12) உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இறந்த கைதி கொலைச் சந்தேகத்தின் பேரில் 30.08.2023 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேவேளை, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 08 சந்தேகநபர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.