பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பம்பலப்பிட்டி பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ரயிலில் அடிபட்டாரா அல்லது ரயிலில் பாய்ந்து காயம் அடைந்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.