மின் கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள்!

#SriLanka #Electricity Bill
PriyaRam
2 years ago
மின் கட்டணம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள்!

ஜனவரி 15 ஆம் திகதி மின்சார கட்டண குறைப்பு முன்மொழிவுகள் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த முன்மொழிவுகள் பெறப்பட்ட பின்னர், மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்படும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை மின் கட்டணத்தை குறைப்பதற்கான பரிந்துரைகள் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/12/1703222335.jpg

அதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி இரண்டாம் வாரத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் மின்சார சபையின் பணிகள் சுயாதீன நிறுவனம் ஒன்றினால் கணக்காய்வுகளை நடத்தி வருவதாக அதன் நிர்வாகம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!