தமிழ் கட்சிகளுடானான ரணிலின் சந்திப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

#SriLanka #R. Sampanthan #Ranil wickremesinghe #shanakiyan
PriyaRam
2 years ago
தமிழ் கட்சிகளுடானான ரணிலின் சந்திப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன் போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1703220085.jpg

காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன், ஈ.பி.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!