தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவும் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

#SriLanka #Flood #money #Finance #Disaster
Mayoorikka
2 years ago
தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவும் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தற்பொழுது தாயகத்தில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு பல புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் உதவி செய்த வண்ணம் உள்ளனர்.

 இந்த உதவிகளை தொண்டு நிறுவனங்கள் ஊடாகவும், சில தனியார்களினூடாகவும் தொடர்ந்தும் செய்த வண்ணம் உள்ளார்கள். அந்தவகையில் தாயகத்தில் உள்ள பாதிக்கப்பட்ட உறவுகள் நன்மை அடைந்து வருகின்றனர்.

 இந்தநிலையில் இவ்வாறு தாயகத்தில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவி செய்துவரும் புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகளுக்கு லங்கா4 ஊடகத்தின் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

 இவைஇவ்வாறு இருக்க சிலர் இவ்வாறு புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் உதவிகளை சிலர் வியாபாரமாகவும், அவர்களது தனிப்பட்ட தேவைகளுக்காவும் பயன்படுத்தி அந்த உதவிகளை துஷ்பிரயோகம் செய்கின்றதாக அறிய முடிகின்றது.

 தற்பொழுது இந்த வெள்ள அனர்த்தங்களை பாவித்து புதிதாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் வாட்அப் செயலி மூலம் உதவி புரிபவர்கள் என கூறிக் கொண்டு மோசடிக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

 இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகத்திற்கு உதவி செய்பவர்கள் பதியப்பட்ட அமைப்புக்கள் அல்லது நேரடியாக தெரிந்தவர்களோ அல்லது உறவினர்களினூடாகவோ உதவிகளை அனுப்பி வைத்து அவர்களூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கலாம்.

 இவ்வாறே ஏற்கனவே சுனாமி ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும் சில தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதாக பணங்களினை பெற்று அதனை மோசடி செய்த சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

 இந்த நிலையிலேயே நீங்கள் செய்யும் உதவிகளை தெரிந்தவர்களூடாகவோ, தெரிந்த தொண்டு நிறுவனங்களூடாகவோ செய்யுமாறு லங்கா4 ஊடகம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

 ஏனெனில் நீங்கள் கொடுக்கும் சிறு உதவி கூட சரியாக பாதிக்கப்பட்ட மக்களையே போய் சேரவேண்டும். அதுவே உதவி செய்த உங்களுக்கும் திருப்தி அளிக்கும். இதுவே லங்கா4 ஊடகத்தின் வேண்டுகோளாவும் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!