நாட்டில் இடம்பெறும் அனைத்து ஊழல்களும் ஜனாதிபதி தேர்தலோடு நிறைவுக்கு வரவேண்டும் : ரொஷான் ரணசிங்க!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டில் இடம்பெறும் கிரிக்கெட் மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி விகாரைகளுக்கு நேற்று (15.12) விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விளையாட்டு ஊழல்களுடன் மற்ற துறைகளில் இடம்பெறும் ஊழல் மோசடிகளும் ஜனாதிபதி தேர்தலோடு முடிவுக்கு வரவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.