ஹாலியெலவில் மண்சரிவு : இரு கடைகள் முற்றாக சேதம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹாலியெல பகுதியில் நேற்று (15.12) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இரு பெரிய கற்கள் சாலையில் விழுந்துள்ள நிலையில், அந்த சமயத்தில் மக்கள் யாரும் அங்கு இன்மையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மண் மேடு சரிந்து விழுந்ததில், அருகில் இருந்த இரண்டு சிறிய கடைகள் முற்றாக இடிந்ததால், கடையில் இருந்த இரு வியாபாரிகள் தப்பியோடியுள்ளனர்.
மண்சரிவு அபாயத்தில் இருந்த மேலும் ஐந்து கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹாலியெல பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வீதியில் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.