விலை அதிகரிப்பு - லிட்ரோ நிறுவனத்தை மூடுவதற்கு தயாராகும் அரசாங்கம்!

#SriLanka #prices #government #Litro Gas
PriyaRam
2 years ago
விலை அதிகரிப்பு - லிட்ரோ நிறுவனத்தை மூடுவதற்கு தயாராகும் அரசாங்கம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT சேர்த்து விலை அதிகரிக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது. வரி அதிகரிப்புடன் தயக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது ரூ.3565 ஆக இருக்கும் 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 18% அதாவது ரூ.3640 ஆக உயரும். இந்நிலையில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/2023/12/1702538830.jpg

எண்ணாயிரம் மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் மற்றும் சுமார் எண்பது இலட்சம் சிலிண்டர்கள் விநியோகம் மூலம் நிறுவனம் நான்கரை பில்லியன் இலாபம் ஈட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம், அரசுத் துறையின் மதிப்புமிக்க நிறுவனங்களை மூடி, தனியார் வர்த்தகர்களுக்கு வழங்க, அனைத்து திட்டங்களையும் அரசு தயார் செய்துள்ளது, என்றார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!