தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மனு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!
#SriLanka
#Election
#Court
PriyaRam
2 years ago
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படாமை காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
அது தொடர்பான மனுக்கள் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டன.

குறித்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க, இந்த வழக்கு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யாதது பிரச்சினைக்குரியது என மனுவொன்றை தாக்கல் செய்திருந்த பஃப்ரெல் அமைப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.