பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு - சவால் விடுத்துள்ள அநுர!

#SriLanka #Parliament #kanchana wijeyasekara #AnuraKumaraDissanayake
PriyaRam
2 years ago
பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு - சவால் விடுத்துள்ள அநுர!

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் பகிரங்க விவாதத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் அறிவித்தார்.

நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தொடர்பான ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

 இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார, ''மின்சக்தி அமைச்சர் விவாதத்திற்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

images/content-image/2023/12/1702459792.jpg 

கட்சி என்ற ரீதியாக அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். மின்சாரசபை தொடர்பில் அவர் கருத்துக்களை முன்வைக்கின்றாரா அல்லது நாம் முன்வைக்கின்றோமா என்பது குறித்து பார்ப்போம். 

ஏற்கனவே மின்சக்தி அமைச்சர் விவாதம் தொடர்பில் எம்மிடம் கடன்பட்டுள்ளார். இதன்படி, நீர் மின்சக்தி, அனல் மின்சக்தி, சூரிய மின்சக்தி உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பில் விவாதத்தை முன்னெடுப்பதற்கு தயார் என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்'' எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!