பலஸ்தீன மக்களுக்காக இலங்கையில் பெருகும் ஆதரவு!
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கையில் பலஸ்தீன சின்னம் பொறித்த சால்வை அணிந்து நீதிமன்றம் சென்றுள்ளார் முஸ்லீம் பெண் சட்டதரணி.
பலஸ்தீன மக்களுக்கு உலக அளவில் பாரிய ஆதரவுகள் கூடும் நிலையில் இலங்கையில் இருந்தும் முஸ்லீம் தரப்பினரிடையிலிருந்து தற்பொழுது அவர்களுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

அண்மையில் பாராளுமன்றத்தில் கூட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தது உரையாற்றியிருந்தனர். இதேவேளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் பாலஸ்தீன கொடியில் அடங்கியிருக்கும் குறியீடுகள் அடங்கிய சால்வையை கழுத்தில் அணிந்தவாறு பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருமாறும் தங்களுடைய ஆதரவை பாலஸ்தீனத்துக்கு தெரிவிக்குமாறும் முஸ்லீம் உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதீயூதின் உட்பட எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்துக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள முஸ்லீம் மற்றும் ஏனைய மக்களும் பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுத்த வேண்டும்.
பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என லங்கா4 ஊடகம் நீதியின் பக்கம் ஆதரவாக இருக்கும்.