வடக்கில் ஆபத்தை உருவாக்கவுள்ள கடலட்டை பண்ணைகள்! நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்
பொருளாதாரம் என்பதை காட்டி இலாபத்தை நோக்காக கொண்டே கடலட்டை பண்ணைகள் உருவாக்ககப்பட்டுள்ளது இதன் பாதக சாதகங்கள் தொடர்பில் ஆய்வுகள் செய்யப்படவில்லை இவை தொடர்பில் துறைசார்ந்தவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர்கள் தெரிவித்தார்கள்.
யாழ் ஊடகமையத்தில் யாழ்ப்பாணம் கியுடெக் கரித்தாஸ் நிறுவனம் மேற்கொண்டுவரும் சுற்றுச் சுழல் தொடர்பாக செயற்பாடுகள் மற்றும் கலந்தாய்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுவருகிறது இது பேசுபொருளாக உள்ளது இது பொருளாதாரம் என கூறி இலாபத்தை மட்டுமே பார்த்து பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது இவை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை துறைசார்ந்தவர்களே இதனை ஆய்வு செய்யவேண்டும் அவர்களுக்கே இந்த பொறுப்பு உள்ளது.

இயற்கை சமநிலையை குழப்பினால் ஆபத்து அபிவிருத்தி திட்டம் ,பொருளாதார திட்டம் என்றாலும் அதனை ஆய்வுகுட்படுத்தி அதன் சாதக பாதகங்களை அறிய வேண்டும். இதேவேளை, கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்துடன் இணைந்தது நாம் மேற்கொண்ட சந்திப்புகள், கலந்துரையாடல்கள் ஆய்வுகள் முடிவுகளை யாழ்மாவட்ட அரசாங்க அதிபரிடம் சமர்பிக்கவுள்ளோம் இந்த முடிவுகளின் படி சுற்றாடல் பாதுபாப்பு ,கரையோர பாதுகாப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் ,மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் அரச நிறுவனங்களின் பொறுப்புக்கள் தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட வேண்டும்என்பதை சுட்டிக்காட்டவுள்ளோம் என்றார்கள்
இந்த சந்திப்பில் யாழ் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராயராசிரியர்களான திருமதி இராயேந்திராமணி ஞானேஸ்வரன் ,சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி துளசிதா வில்லியம் சாந்தகுமார் மற்றும் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் சார்பில் யோசெப் பாலாமற்றும் யூலியன் ஆகிநோர் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தார்கள்