இரட்டைக் குழந்தைகள் விற்பனை -தாய் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றின் அறிவிப்பு!
#SriLanka
PriyaRam
2 years ago
பிலியந்தலையில் இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைதான மூன்று பெண்களும் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த மூன்று பெண்களும் பொலஜஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிறந்து 07 நாட்களேயான குழந்தைகளே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், குறித்த குழந்தைகளின் தாயான பிலியந்தலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும், குழந்தைகளை வாங்க வந்த பொலன்னறுவை மற்றும் ராகம பகுதிகளை சேர்ந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.