தெஹிவளையில் கைக்குண்டொன்று மீட்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளை பொலிஸ் டொமைன் இலக்கம் 124, அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை என்ற முகவரியில், அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இந்த கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நீல நிற பொலித்தீன் பையில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு போன்ற ஒன்று இருப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.
பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.