வீட்டுத்திட்ட பயனர்களுக்கான முக்கிய தகவல் - அறிவிக்கப்பட்டது இறுதித் திகதி!
#SriLanka
#government
PriyaRam
2 years ago
வடக்கு மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, முன்னெடுக்கப்படவுள்ள இந்த வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது.

இந்த வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காத தகுதியுள்ள பயனாளிகள் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு வடமாகாண ஆளுநர் ஊடக பிரிவு கோரியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்த வீட்டுத்திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.