பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் - இடைநிறுத்தப்பட்ட பல்கலை மாணவர்கள்!
#SriLanka
#Student
#Attack
#University
PriyaRam
2 years ago
களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 04 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு 2 குழுக்கள் நியமிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில், மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.