மின்சார சபை ஊழியர்கள் மீது சரமாரித் தாக்குதல் - பொலிஸார் விசாரணை!
#SriLanka
#Hospital
#Attack
#Electric
PriyaRam
2 years ago
மின்சார இணைப்பை துண்டிக்கச் சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர் மீது கம்பஹாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த குறித்த இரண்டு ஊழியர்களும் கம்பஹா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மின்சார இணைப்பை துண்டிக்க சென்ற போதே, நேற்று பிற்பகல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.