ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கான சம்பளம்தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கான சம்பளம்தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக பணியாற்றும் பதினைந்து பேருக்கான மாதாந்த செலவு கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தினால் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கொடுப்பனவுகள் உட்பட செலுத்தப்பட்ட தொகை இருபத்தி ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து எண்ணூற்று முப்பத்தேழு ரூபாயாகும்.

 பொருளாதார நிலைப்படுத்தல், மீட்சி மற்றும் வளர்ச்சி ஆகியன தொடர்பான ஆலோசகருக்கு மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். 

images/content-image/2023/11/1701679074.jpg

ஊடகம் மற்றும் தொடர்பாடல் ஆலோசகருக்கு இரண்டு இலட்சத்து பதின்மூன்றாயிரம் ரூபாவும், விஞ்ஞான விவகார ஆலோசகருக்கு ஒரு இலட்சத்து தொண்ணூறு ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது. 

இதில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு பெண் உறுப்பினரும் அடங்குவர். 

இந்த மூவருக்கும் எம்.பி.யின் ஓய்வூதியம் உண்டு. ஜனாதிபதியின் ஆலோசகர்களின் எண்ணிக்கை இருபத்தி மூன்று மற்றும் அவர்களில் எட்டு பேர் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் இல்லாமல் சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!