தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் நோயாளர்கள்!

#SriLanka #Hospital #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையில் பல சிக்கல்களை எதிர்நோக்கும் நோயாளர்கள்!

தெஹியத்தகண்டிய ஆதார வைத்தியசாலையின் ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியதனால் சகல சத்திரசிகிச்சைகளும் ஸ்தம்பிதமடைந்து நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து மருத்துவமனை பணிப்பாளரால், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

குறித்த கடிதத்தில் அவசர அறுவை சிகிச்சை உட்பட 50 அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலன்னறுவை வைத்தியசாலை உட்பட அருகாமையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அந்த வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசல் காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

எனவே, மருத்துவமனைப் பணிப்பாளர், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!