நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் நோய்தொற்று!
#SriLanka
#Health
#Hospital
#Dengue
Mayoorikka
2 years ago
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, நுகேகொடை, மஹரகமை, கம்பஹா, வத்தளை, களனி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இன்று முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.