கன்னி ராசியினருக்கு பொருளாதார நிலை உயரும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
10 months ago
கன்னி ராசியினருக்கு பொருளாதார நிலை உயரும் - இன்றைய ராசிபலன்

மேஷம்:

அசுவினி: முயற்சியில் வெற்றி உண்டாகும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பரணி: ஆரோக்கியம் மேம்படும். செயலில் வேகம் இருக்கும். வியாபாரம் விருத்தியாகும். கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். எதிர்ப்புகள் விலகும். வழக்கு சாதகமாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். ரோகிணி: வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செயல்களில் குழப்பம் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். தேவைக்கேற்ற பணம் வரும். திருவாதிரை: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் கவனம் அவசியம். புனர்பூசம் 1,2,3: பயணத்தில் எச்சரிக்கை தேவை. பிறரது விஷயத்தில் தலையிடுவதால் பிரச்னை உருவாகும்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பூசம்: பணியிடத்தில் வேலை பளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடங்கள் தோன்றும். ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நன்மை அடைவீர்கள்.

சிம்மம்

மகம்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். அரசு வழி முயற்சியில் இருந்த தடைகள் விலகும். பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். அஸ்தம்: உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: புதிய வாகனம் வாங்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று மாலையில் பலிதமாகும். சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: குடும்பத்தினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். அதில் ஆதாயம் தோன்றும்.

விருச்சிகம்

விசாகம் 4: செயல்களில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை உண்டாகாமல் போகும். அனுஷம்: இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். கேட்டை: வாகனப் பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள். வரவு செலவில் சங்கடங்கள் தோன்றலாம்.

தனுசு

மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். பூராடம்: நீண்டநாள் முயற்சி இன்று பலன் தரும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உத்திராடம் 1: எதிர்பார்த்த அனுகூலம் ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்குவீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உடல்நிலை சீராகும். பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும். திருவோணம்: விஐபிகள் ஆதரவுடன் உங்கள் முயற்சியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அவிட்டம் 1,2: பொது நலனில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். சதயம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பூரட்டாதி 1,2,3: பூர்வீக சொத்து விவகாரத்தில் குடும்பத்தினர் கூறும் ஆலோசனையை கேட்டு செயல்படுவீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: அந்நியர்களால் சங்கடங்களை சந்திப்பீர்கள். உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வீர்கள். உத்திரட்டாதி: மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். புதிய நண்பரை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். ரேவதி: திடீர் பயணம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்ப்பார்ப்பு தள்ளிப்போகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!