மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
6 months ago
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை  வழங்கும் நிகழ்வு!

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இன்று (29.11) இடம்பெற்றது. 

 மன்னார் முருங்கன் தேசிய பாடசாலையில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். 

images/content-image/1701265846.jpg

இதன் போது மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 250 மாணவர்களுக்கான புத்தக பை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் சேவையை பாராட்டி பிரதி அமைச்சரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  

images/content-image/1701265878.jpg

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், பிரதேச செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.