ரிஷப ராசியினருக்கு சட்ட ரீதியான சங்கடங்கள் ஏற்படும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
ரிஷப ராசியினருக்கு சட்ட ரீதியான சங்கடங்கள் ஏற்படும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். பரணி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். போட்டியாளர்களால் உங்கள் செயல் ஒன்று தள்ளிப்போகும். ரோகிணி: குறுக்கு வழியில் வரும் ஆதாயத்தினால் சட்ட ரீதியான சங்கடங்கள் ஏற்படலாம். மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். நண்பர்களால் நன்மை உண்டாகும். திருவாதிரை: வாழ்க்கைத் துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.

கடகம்

புனர்பூசம் 4: மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவீர். உழைப்பு அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவை நிறைவேறும். பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர். அதிரடியாக ஒரு முயற்சியை மேற்கொள்வீர். உத்திரம் 1: வேலை பளு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி தள்ளிப்போகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள். வெளியூர் பயணத்தால் சிறு சங்கடங்கள் தோன்றும். அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்வீர்கள். சித்திரை 1,2: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். மனதில் சோர்வு உண்டாகும்.

துலாம்

சித்திரை 3,4: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சுவாதி: சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும். விசாகம் 1,2,3: துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். புதிய இடம் வாங்கும் முயற்சி நிறைவேறும். கேட்டை: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். 

தனுசு

மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். மற்றவரது விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். பூராடம்: பிறரால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். செயல்களில் கவனம் தேவை. உத்திராடம் 1: மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள். கோயில் வழிபாடு நிம்மதியை ஏற்படுத்தும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: வரவை விட செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானமும் கவனமும் தேவை. திருவோணம்: பிறருக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அவிட்டம் 1,2: பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபார முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். சதயம்: வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பூரட்டாதி 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மூத்த சகோதரர் உங்கள் செயலுக்கு உதவியாக இருப்பார். 

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்திரட்டாதி: நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். ரேவதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு