பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம்

#India #sports #2023 #Gold #Player #Sports News #news
Mani
10 months ago
பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாளாகும், இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில், பாரா ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளது. பெண்கள் காம்பவுண்ட் ஒபன் வில்வித்தை மற்றும் ஆடவருக்கான 1500 மீட்டர் டி38 ஓட்டம் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றனர்.

21 தங்கம், 26 வெள்ளி, 43 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 90 பதக்கங்களைக் குவித்துள்ள இந்தியா, பாரா ஆசிய விளையாட்டுத் தொடருக்கான பதக்கப் பட்டியலில் தற்போது 5வது இடத்தில் உள்ளது.