ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவைச் சேர்ந்த சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார்!

#India #sports #2023 #Tamilnews #Player #ImportantNews #Sports News #AsiaCup
Mani
10 months ago
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவைச் சேர்ந்த சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார்!

சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சுமித் அன்டில் 73.29 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதே பிரிவில் மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் 62.06 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 10 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.