2023 ஆசிய பரா விளையாட்டு போட்டி : 02 தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளி பதக்கத்தை வென்ற இலங்கை!
#Lanka4
#sports
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீராங்கனை சமிதா துலன் வெள்ளி வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F64 பிரிவில் கலந்து கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சமிதா துலான் 64.09 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதேபோல் தடகள வீரர் பிரதீப் சோமசிறி தங்கம் பதக்கத்தையும் வென்றுள்ளார். நேற்று(24.10) நடந்த ஆடவருக்கான 1500 மீ (டி46) போட்டியில் 4:05.14 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்து அவர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
இதேவேளை, ஆடவருக்கான 100 மீற்றர் (T44) போட்டியில் நுவான் இந்திக்க 11.63 வினாடிகளில் கடந்து இலங்கைக்கான தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்தார். 2
022 ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் அக்டோபர் 22 ஆம் திகதிதொடங்கி, அக்டோபர் 28 ஆம் திகதி வரை நடைபெறும்.