பிரமச்சாரி ஆறு திருமுருகன் திருமணத்தை பற்றியும் நான்காம் சடங்கு பற்றியும் கூறும் உண்மைகள்.

#Tamil People #wedding #Lifestyle #Lanka4 #லங்கா4 #வழி #தமிழ் #வாழ்க்கை
Mugunthan Mugunthan
6 months ago
பிரமச்சாரி ஆறு திருமுருகன் திருமணத்தை பற்றியும் நான்காம் சடங்கு பற்றியும் கூறும் உண்மைகள்.

தற்காலத்தில் திருமண வீடுகளில் நான்காம் சடங்கு என்று கூறிக் கொண்டு பல உயிர்களை வெட்டி வீழ்த்தி, தாமும் உறவினர்களும் நன்பர்களும் பசியாற உண்பதையே பலர் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

 உன்மையில் அதுவல்ல அதன் அர்த்தம். திருமணமாகி சுமங்கலியான பெண் தனது வாழ்க்கை பயணத்தை எவ்வாறு தொடங்க வேண்டும் என்று நமது சைவப் பாரம்பரியம் பல விதிமுறைகளை தெளிவாக வகுத்து கொடுத்துள்ளது.

 பூதாக்கலம் என்பது திருமணமாகி சுமங்கலியான பெண் தனது கணவனுடன் எவ்வாறு உணவு அருந்த வேண்டும் என்பது பற்றி மிக தெளிவாக பல விதிகளை சொல்லுகின்றது.

 பல வயதான சுமங்கலி பெண்கள் எவ்வாறு உணவுகளை தயாரிப்பது அதை எவ்வாறு பரிமாறுவது என்பது பற்றி புதிதாக திருமணமாகி சுமங்கலியான பெண்ணிற்கு கற்றுக் கொடுத்து வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.

images/content-image/1698046485.jpg

 வாழை இலையிலே அன்னம் போட்டு அதன் பின்பு மருத்துவ குணம் உடைய பாகற்காய் போன்ற கறி வகைகளை வலப் பக்கமாகவும் ஏனைய சுவை மிக்க கறி வகைகளை இடப் பக்கமாவும் வைத்து பரிமாற வேண்டும் என்று நம் முன்னோர்கள் சுமங்கலி பெண்களிற்கு சொல்லிக் கொடுத்தார்கள்.

 உடலிற்கு நன்மை செய்யக் கூடிய மருத்துவ குணம் உடைய உணவுகளை தனது கணவன் இலகுவில் எடுத்து உண்ணும் பழக்கத்தை இதன் மூலம் சொல்லிக் கொடுத்தார்கள்.

 திருமணமான பல வயதான சுமங்கலி பெண்கள் முதல் முதலில் திருமணமாகி செல்லுகின்ற பெண்ணிற்கு உணவு தயாரிப்பது தொடக்கம் அதை பரிமாறுவது வரை பல விதிகளை தெளிவாக சொல்லி கொடுப்பார்கள்.

 திருமணம் நடைபெற்று நான்கு நாட்கள் சடங்கு நடைபெற்றது. நான்காம் சடங்கோடுதான் அவர்களை தனிக் குடித்தனத்திற்கு அனுப்பினார்கள் நம் முன்னோர்கள்.

images/content-image/1698046565.jpg

 அந்த நான்கு நாட்களுக்குள் அந்த புதிய சுமங்கலிப் பெண் அறிய வேண்டிய தனது கடமைகள் பற்றியும் விதிகள் பற்றியும் பல வயதான சுமங்கலிப் பெண்கள் மிகப் பக்குவமாக சொல்லிக் கொடுப்பார்க்ள்.

 மங்களகரமான நமது திருமண முறைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் என்ற போர்வையில் திசை மாறி நான்காம் சடங்கு என்றால் பல உயிர்களை வெட்டி வீழ்த்தி உறவுகளுக்கு விருந்து வைப்பது என்று தற்காலத்தில் மாறி விட்டது.

 இதற்கு அறியாமைதான் காரணம். சுமங்கலியான பெண் தனது வாழ்க்கை பயணத்தை மங்களத்தோடு ஆரம்பித்து வாழ்விற்கான பல வழிமுறைகளை சொல்லி கொடுத்த எமது பாரம்பரியங்கள் எல்லாம் தற்காலத்தில் சிதைவடைந்து சென்று விட்டன.

 எங்களுடைய சைத் திருமணங்களின் சடங்குகள் வெற்றிலையில் இருந்து தொடக்குகின்றது. வெற்றிலை என்பது மகாலட்சுமி ஆகும். திருமண நிச்சயதார்த்தத்தின் போது இரு வீட்டார்களும் வெற்றிலைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வார்கள்.

 நாங்கள் இதயத்தாலே எமது உள்ளத்தாலே இந்த மங்களத்தின் அடையாளமாக உள்ள வெற்றிலையாலே நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து ஒரு குடும்பமாக வாழ்வோம் என்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகின்றது. இதே வெற்றிலையினைதான் அர்ச்சனைக்கு பயன்படுத்துகின்றோம். 

நாங்கள் உள்ளத்தாலே அன்னையே உன்னை வழிபடுகின்றோம் என்று உணர்த்துவதற்காக வெற்றிலையினை பயன்படுத்துகின்றோம். வெற்றிலையுடன் உள்ள பாக்கு சிவனும் சக்தியும் சேர்ந்தது. 

images/content-image/1698046643.jpg

பாக்கு ஏதற்கு மங்களப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது என்றால் அதிலே சிவனுடை சக்தியும் அம்பாளுடைய சக்தியும் உள்ளது. ஒவ்வொரு நாளும் அர்ச்சனையிலே வெற்றிலையும் பாக்கும் வைக்கப்படுகின்றது வெற்றிலையும் பாக்கும் மங்களப் பொருட்கள் என்பதுடன் சிவனையும் சக்தியையும் பிரிக்க முடியாது என்ற தத்துவத்தினையும் இது நமக்கு சொல்லி தருகின்றது.

 சைவத் தமிழ் திருமணங்களிலே பெண்ணுடைய கழுத்திலே தாலி ஏறுகின்ற பொழுது எந்தவொரு அபசகுணச் சத்தங்களும் கேட்க கூடாது என்பதற்காக கெட்டி மேளம் ஒலிக்க தாலி கட்டப்படுகின்றது.

 ஒரு பெண்ணிற்கு சுமங்கலி என்ற உயர்ந்த அந்தஸ்தினை தரும் வேளையான தாலி கட்டும் நேரத்தில் எல்லோரும் கை எடுத்து கும்பிட வேண்டும். நமது பண்பாட்டிலே திருமச் சடங்கிலே திருமுறை பாடிய முறை எம்மிடத்திலே முன்பு இருந்தது. தற்காலத்திலும் இந்தியாவிலே காரைக்குடியிலே இந்த முறை முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

 மண்ணின் நல்ல வண்ணம்

 வாழலாம் வைகலும்

 எண்ணின் நல்லகதிக்கி

 யாதுமோர் குறைவிலைக்

 கண்ணின் நல் லஃதுறுங்

 கழுமல வளநகர்ப்

 பெண்ணின் நல் லாளொடும்

 பெருந்தகை யிருந்ததே

 என தாலி கட்டப்படும் நேரத்திலே இந்த தேவாரத்தினை பாட வேண்டும். இந்த முறை நமது பண்பாட்டிலே முன்பு இருந்த ஒன்றுதான். யாழ்ப்பாணத்திலே தற்காலத்தில் திருமணங்களிலே கை எடுத்து கும்பிடுபவர்களை காண முடியவில்லை. 

மண மக்களின் பெற்றோர்கள்தான் பாவம் தமது பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கை எடுத்து கும்பிடுகின்றார்கள் ஏனையவர்கள் இதை செய்வதே இல்லை.

 ஒரு அபசகுணமும் இல்லாமல் தாலி கட்ட வேண்டும் என்ற எமது பண்பாட்டிலே தற்போது தாலி கட்டும் போது வீடியோ புகைப்படம் எடுப்பவர்கள் பொறுங்கோ பொறுங்கோ என்று சொல்லுகின்றார்கள்.

 அந்தப் பக்கம் திரும்புங்கோ இந்தப் பக்கம் பாருங்கோ என்று கட்டளை இடுகின்றார்கள். மங்களகரமாக தாலி ஒரு பெண்ணின் கழுத்திலே ஏற வேண்டும் என்றே அக்கினி வளர்த்து பல சடங்குகள் செய்து திருமணத்தை ஏற்பாடு செய்யும் போது தாலி ஏறும் நேரத்தில் பல அப சகுணக் காரியங்களை படத்திற்காக நம்மவர்கள் செய்கின்றார்கள்.