அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

#India #Tamil Nadu #Rain #Breakingnews
Mani
2 years ago
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தருகின்ற வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வருகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!