ஐசிசியிடம் புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

#Complaint #Pakistan #Cricket #WorldCup #Commitee #ICC
Prasu
2 years ago
ஐசிசியிடம் புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைராலாகியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

 இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களை குறிவைத்து முறையற்ற வகையில் ரசிகர்கள் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!