அரியலூர் பட்டாசு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

#Tamil Nadu #Festival #2023 #fire #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
அரியலூர் பட்டாசு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பல இடங்களில் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உற்பத்தி செயல்பாட்டின் போது சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சில பகுதிகளில் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவரது நாட்டு பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதனால், பட்டாசு ஆலையின் அனைத்து அறைகளும் முற்றிலும் சேதமடைந்தன.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மருமகனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் திருச்சி சரக டிஐஜி பகலவன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!