இஸ்ரேல் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிப்பு!

#India #Israel #Oil #2023 #Breakingnews #ImportantNews #petrol
Mani
2 years ago
இஸ்ரேல் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 5% அதிகரிப்பு!

மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசா மலைக்குன்று பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் நேற்று முன்தினம்(அக்.,07) ஈடுபட்டனர். தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இரு தரப்பினர் இடையே மோதலில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

முழு உலகிற்கும் மேற்கு ஆசியாவின் பகுதி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலகின் கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பங்கு இப்பகுதியில் இருந்து கிடைக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் அக்.6ம் தேதி 84.58 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இன்று(அக்.,09) 89 டாலராக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!