இந்திய கடற்றொழிலாளர்களை கொடூரமாகத் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!
#India
#SriLanka
#Attack
#Fisherman
PriyaRam
1 year ago

இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களை தாக்கி சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி 2 மீனவர்கள் வெட்டுக் காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



